நதிகளைத் தூய்மையாக வைத்து நாம் சுகதேகிகளாக இருக்க வேண்டும்


நைல் நதிக்கரையில் மனித நாகரிகம் உருவாகியதென்று பண்டைய வரலாற்று நூல்கள் சான்ற பகர்கின்றன. இதன் படி நைல் நதிக்கரையில், ஒரு மனிதன் தான் செல்வமாக வளர்க்கும் நாயுடன் இருந்ததாக வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.
இதனடிப்படையில் மனித நாகரிகத்தின் ஜீவாதாரமாக நதிகள் தொன்று தொட்டு விளங்கி வருகின்றன. ஒரு தாயைப் போன்று இப்புவியில் வாழும் மனித இனத்திற்கு அரவணைப்பைத் தந்து மனிதன் தனது உணவுக்கான விவசாயத்தை செய்வதற்குத் தேவையான நீர்ப்பாசன வசதியையும் கொடுக்கும் நதிகளுக்கு மனித இனம் நன்றி தெரி விப்பதற்கு பதில், நாளாந்த வாழ்க்கையில் அதற்கு தீங்கிழைத்து வருவது உண்மையிலேயே வேதனையை அளிப்பதாக இருக்கிறது.
மனிதன் நதிகளை அசுத்தப்படுத்துவதினால் அவன் நதிகளுக்கு தீங்கி ழைக்கவில்லை. தனக்குத் தானே தீங்கிழைத்து தனது தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறான் என்று நாம் கூறினால் சுயமாக சிந்திக்கும் வலுவுள்ள எவரும் எதிர்ப்புத் தெரி விக்க முடியாது.
இந்திய மக்களின் இயற்கை தந்த பேரன்னையாக கங்கை நதி இருக் கிறது. இமாலய மலை உச்சியில் இருந்து ஊற்றெடுக்கும் தூய்மை யான நீரைக் கொண்ட கங்கை நதியின் நீளம் 2,500 கிலோமீற்றர் களாகும். இது இரு நாடுகளுக்கிடையில் செல்லும் ஒரு நதியாகும். இந்தியா வின் இமாலய மலையில் ஆரம்பிக்கும் கங்கை நதி இறுதியில் பங்களாதேஷிற்கு சென்று அதனூடாக சமுத்திரத்தில் சங்கமிக்கின்றது.
உலகிலுள்ள மிகப் பெரிய 10 நதிகளில் கங்கையும் ஒன்றாகும். கங்கை நதி பின்னர் யமுனை நதியுடன் இணைந்து செல்கின்றது. உலகில் உள்ள அசுத்த நீரை தன்னகத்தே கொண்டுள்ள 5 நதிகளில் கங்கை நதியும் ஒன்றாகும். கங்கை நதியில் ஆண்டாண்டு காலமாக இந்து க்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை சங்கமிக்கச் செய்கின்ற போதிலும், இந்த சடலங்களினால் அந்த நதி அசுத்தமடைவதில்லை.
கங்கையில் நீராடினால் மோட்சத்திற்கு போகலாம் என்ற ஐதீகம் இந்து மக்களின் மனதில் வலுவூன்றி இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் தங்கள் உறவுகளின் சடலங்களை கங்கையில் போட்டு விடுகின்றனர்.
இன்னும் கங்கை நதியின் புனிதத்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காக சிவபெருமான் கங்கை நதியின் நீரை தனது தலையில் தாங்கி அதனை வடிந்து செல்ல இடமளித்ததன் மூலம் அதன் புனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் பேணப்படுவ தாக இதிகாசங்கள் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
கங்கை நதியில் நுண்ணுயிர்கள் இருப்பதனாலும் அதில் உயிர்வலிகாற் றும் சங்கமித்திருக்கிறது. இந்த இரசாயன மாற்றம் மூலம் கங்கை நதி நீர் புனிதத்தன்மை பெறுகிறதென்று இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
இந்த தெய்வீக கங்கை நதிக்கு இன்று இந்தியர்கள் பல வகையிலும் தீங்கிழைத்து அதன் தூய்மைக்கு கேடு விளைவிக்கின்றனர். கங்கை நதியில் இந்தியாவிலுள்ள 125 பாரிய தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அன்றிலிருந்த கங்கை நதியின் மகத்துவம் இன்று மாற்றம் கண்டுள்ளது.
கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து இன்று இலங்கையின் மிக வும் நீளமான நதியான மகாவலி கங்கைக்கும் களனி ஆற்றுக்கும் களுகங்கைக்கும் மற்ற பிரதான ஆறுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மனிதனின் சுயநலமே எமது நாட்டின் ஆறுகள் அசுத்தமடைவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது.
ஆறுகளில் குப்பைக் கூளங்களை போடுவதன் மூலம் தங்கள் சுற்றா டலை சுத்தமாக வைத்திருக்கலாம் என்ற மனிதனின் சுயநலம் உண்மையில் அவனுக்கே தீங்கிழைக்கின்றது என்பதை அவன் உணர்ந்து கொள்வதே இல்லை.
ஆற்று நீரில் இருந்தே இலங்கை மக்களின் குடிநீர் தேவையும் வீட் டுப் பாவனைக்கான நீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவ்விதம் எமது ஆறுகள் அசுத்தமடைந்தால் நிச்சயம் எங்கள் நாட்டு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய ஆபத்தும் ஏற்படுவதை எந்தவொரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
இன்னுமொரு வகையிலும் மனிதனின் பணம் சம்பாதிக்கும் சுயநலம் காரணமாக ஆற்று வளங்கள் சூறையாடப்படுகின்றன. கட்டட நிர்மாணப் பணிகளுக்கு ஆற்று மணல் மிகவும் சிறந்ததென்று பொறியியலாளர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்ற போதிலும், இந்த ஒரே கூற்றை ஆதாரமாக வைத்து அளவுக்கதிகமாக ஆற்று மணலை மனிதன் எடுக்க ஆரம்பித்தால், ஆறுகளின் ஆழம் அதிகரித்து, அதனால் ஆற்றின் நீர்மட்டம் கடலில் நீர்மட்டத்தை விட குறைவாகிவிடும்.
இதன் காரணமாக கடல் நீர் ஆறுகள் கடலில் சங்கமிக்கும் நுழைவாயில்களின் ஊடாக ஆற்றில் புகுந்து, ஆற்று நீரை உவர் நீராக மாற்றிவிடுமென்று விஞ்ஞானிகள் அபாய அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.
எனவே, இனிமேலாவது நம் நாட்டவர்கள் ஆற்றின் மகத்துவத்தை பேணிப் பாதுகாத்து அவற்றிற்கு தீங்கிழைக்காத வகையில் நடந்து கொள்வது அவசியமாகும். இல்லையானால் பல்வகையான அத்தி யாவசிய உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்வதைப் போன்று எங்கள் நாட்டுக்கு குடிநீரையும், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைந்து இறக்குமதி செய்ய வேண் டிய அவல நிலையும் தோன்றும்.

கருத்துரையிடுக

 
Top